தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை
குடியரசு துணைத் தலைவர்: ’அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை.!’ - கார்கே வீட்டு கூட்டத்தின் பின்னணி
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை நிறுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குடியரசு துணைத் தலைவர்
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து அப்பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையம் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து அதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது .
ஏற்கனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் ராதாகிருஷ்ணன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது என சொல்லப்படுகிறது.

கூடிய இந்தியா கூட்டணி
எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து கே.சி வேணுகோபால், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியில் இருந்து மகுவா மாஞ்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து எம்.ஏ பேபி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து டெரிக் ஒ பிரைன், ஆர்.ஜெ.டியில் இருந்து பிரம சாந்திர குப்தா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், திமுகவின் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை 5.45 அளவில் தொடங்கிய இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. ஆனால் நேற்றைய கூட்டத்தில் யாருடைய பெயரும் இறுதி செய்யப்படவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதற்கு பின்னர்தான் பெயர் இறுதி செய்யப்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அரசியல் சார்பு இல்லாத
அதே நேரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் அரசியல் சார்பு இல்லாத நபர்களை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதாவது, கடந்த காலத்தில் அப்துல் கலாமை குடியரசு தலைவராக கொண்டு வந்ததைப் போன்று அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நபரை வேட்பாளராக முன் நிறுத்துவதன் மூலம் பாஜக கூட்டணிக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் சி.பி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதனை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி சார்பாக அறிவிக்கப்படும் வேட்பாளர் தமிழகத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இன்று மதியம் இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயர் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs