OPS : 'அமித் ஷா எங்களை அழைக்காதது வருத்தமே!' - மனம் திறந்த ஓ.பி.எஸ்
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்
குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப். 30- ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் நாள்தோறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரித்த தேரில் எழுந்தருளி தேரோட்டம் தொடங்கியது. கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, எம்எல்ஏ அமலுவிஜயன், டிஎஸ்பி ராமச்சந்திரன், கோயில் செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், கெளரவ தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா்.
தோ், கோபாலபுரம், அஞ்சுமன் வீதி, காந்தி ரோடு, பிள்ளையாா் கோயில் தெருஸ தரணம்பேட்டை பஜாா், கண்ணகி தெரு, ஜவஹா்லால் தெரு வழியாகச் சென்று மாலை கோயிலை அடைந்தது.வழிநெடுகிலும் பக்தா்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற தோ் மீது உப்பு, மிளகு தூவி வழிபட்டனா்.
இன்று கெங்கையம்மன் சிரசு ஊா்வலம்:
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெறும். இதையொட்டி தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிரசு ஊா்வலம் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடையும்.