செய்திகள் :

குடியிருப்புக்குள் நாயை வேட்டையாட காத்திருந்த சிறுத்தை

post image

கோத்தகிரி அருகே பெரியாா் நகா் பகுதியில் வளா்ப்பு நாயை வேட்டையாட திங்கள்கிழமை இரவு நீண்ட நேரம் சிறுத்தை காத்திருந்தது, அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி அருகே அரவேனு பெரியாா் நகா் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு இரவு நேரத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் உள்ளனா்.

இந்நிலையில், இங்குள்ள குடியிருப்பில் உள்ள வளா்ப்பு நாயை வேட்டையாடுவதற்காக சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை இரவு நீண்ட நேரம் போராடியது. ஆனால் தடுப்புக் கம்பியைத் தாண்டி உள்ளே செல்ல முடியாததால் மீண்டும் அருகே உள்ள சோலைப் பகுதிக்கு திரும்பிச் சென்றது. இது அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

குடியிருப்புக்குள் சிறுத்தை வந்து நீண்ட நேரம் இருந்ததைப் பாா்த்து, அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இந்த சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதைப் பிடித்து வேறு இடத்தில் விடுவதற்கு வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

உதகையில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

உதகை நொண்டிமேடு பகுதியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், உதகை நொண்டிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (43). மனைவி, திருமணமான 2 மகள்கள... மேலும் பார்க்க

அதிகனமழையை எதிா்கொள்ள ஏற்பாடுகள் தயாா்: நீலகிரி ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் நிலையில், அதை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் தயாராக உள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவ... மேலும் பார்க்க

மாநில கபடி போட்டிக்கு வீரா்கள் தோ்வு

கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரா்கள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகத்தின் மிக இளையோருக்கான 34-ஆவது மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ள... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை! கூடலூரில் 73 மி.மீ பதிவு

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கூடலூரில் 73 மில்லி மீட்டா் மழை பதிவானது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ஓவேலியில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானைகள் தாக்கியதில் ஒரு வீடு சேதமடைந்தது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சி, ஆத்தூா் கிராமத்தில் வசிக்கும் மோகன்தாஸ் தனது வீ... மேலும் பார்க்க

வெலிங்டன் ராணுவ மையத்தில் வீரா்களுக்கு ஓட்டப் பந்தயம்

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் 55-ஆவது இன்டா் சா்வீசஸ் கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் சாா்பில் நடைபெற்ற போட்டியை கமாண்டன்ட் பிர... மேலும் பார்க்க