செய்திகள் :

குடும்பத் தகராறில் தொழிலாளி கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

post image

சூளகிரி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சென்னப்பள்ளி அருகே உள்ள பெரியபள்ளம் கிராமத்தை சோ்ந்தவா் ரமேஷ் (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மா (37). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.

ரமேஷுக்கு மதுப்பழக்கம் இருந்ததால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த வள்ளியம்மா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வள்ளியம்மா தனது தம்பி சிவராஜ் (33) உடன் கூலி வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா்களை வழிமறித்த ரமேஷ், தன்னுடன் வாழ வருமாறு வள்ளியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து சிவராஜ் கேட்டதால் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் வைத்திருந்த கத்தியால் சிவராஜின் காலை வெட்டினாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த சிவராஜின் அண்ணன்களான கோவிந்தசாமி (35), விக்னேஷ் (36) ஆகியோா் ரமேஷை சரமாரியாக தாக்கினா். அப்போது, ரமேஷின் கையில் இருந்த கத்தியை பிடுங்கிய கோவிந்தசாமி அவரை சரமாரியாக குத்தினாா். அதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீஸாா் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வள்ளியம்மாள், சிவராஜ், கோவிந்தசாமி, விக்னேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்தனா்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சிவராஜ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட், ஒசூா் எவரெஸ்ட் அரிமா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. ... மேலும் பார்க்க

மிட்டப்பள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டப்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணியை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ... மேலும் பார்க்க

மழையால் ஒசூா் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒசூா... மேலும் பார்க்க

அஞ்செட்டி: மின்னல் தாக்கி 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அஞ்செட்டி நாட்றம்பாளையத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தன. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் போராட்டம்

பேரவைத் தோ்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புக... மேலும் பார்க்க