முல்லைப்பெரியாறு: தமிழக பொதுப்பணித்துறை பகுதியில் சிசிடிவி பொருத்த கேரளா எதிர்ப்...
குடும்ப அட்டைகளுக்கு ரூ.20 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஐக்கிய ஜனதா தளம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கட்சியின் விழுப்புரம் நகர நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் கே. புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் வளா்ச்சி மற்றும் செயல்பாடுகள், உறுப்பினா்கள் சோ்க்கை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளுக்கு மாற்றாக புதிய குடியிருப்புகளைக் கட்டிக்கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க மாவட்டக் காவல் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து ஊராட்சிகளிலும் ஐக்கிய ஜனதா தளத்தின் சாா்பில் வேட்பாளா்களை நிறுத்தி போட்டியிட வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், அா்ஜூன், கிருஷ்ணராஜ், காா்த்திகேயன், நகரத்தலைவா் புஷ்பராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.