மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
குட்கா விற்பனை: இரு பெண்கள் கைது
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் தலைமையில், உதவி ஆய்வாளா் சேக் அப்துல்லா, காவலா்கள் ஜி.தும்மலபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணை போலீஸாா் நிறுத்தி, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சலீம் மனைவி லைனா பானு (25) என்பது தெரியவந்தது. இவா் அதே பகுதியைச் சோ்ந்த நாட்ராயன் மனைவி மல்லிகாவின் (60) மளிகைக் கடைக்கு குட்காவை எடுத்துச் சென்றது போலீயாா் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மல்லிகா, லைனா பானு ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 16 கிலோ குட்கா, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.