செய்திகள் :

"குட் பேட் அக்லி படத்திலிருந்து பாடல்களை நீக்குக" - அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா எச்சரிக்கை!

post image

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா.

அதில் தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்ட பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதுடன் இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

குட் பேட் அக்லி

கடந்த செப்டம்பர் 8ம் தேதி வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பு (OA No. 889/2025, CS No. 226/2025)-இன் படி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை திரையிட, ஒளிபரப்ப, ஸ்ட்ரீம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைமீறி குட் பேட் அக்லி படத்தில் 'ஒத்து ரூபாயும் தாரே', 'இளமை இதோ இதோ', 'என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு குறித்து நன்றாக அறிந்திருந்தும், பாடல்களை பயன்படுத்துவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, இளையராஜாவின் வழக்கறிஞர் குழுவான மேத்ஸ் லாவ் அசோசியேட்ஸ் அனுப்பிய நோட்டீஸில்.

இளையராஜா

உடனடியாக குட் பேட் அக்லி படத்தின் திரையிடல், ஸ்ட்ரீமிங்கை நிறுத்த வேண்டுமென்றும், இளையராஜாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அனைத்து பின்விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Basil Joseph: கதைகளை புதிய வழிகளில் சொல்ல விரும்புகிறேன்! - புதிய பாதையில் களமிறங்கும் பேசில் ஜோசப்

அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து மலையாள சினிமாவில் மோஸ்ட் வான்டெட் நடிகராக வளர்ந்து நிற்கிறார் பேசில் ஜோசஃப். இவர் கடைசியாக நடித்திருந்த 'பொன்மேன்', 'மரணமாஸ்' என இரண்டு திரைப்படங்கள் பெரும் வெற்றி... மேலும் பார்க்க

Coolie: "அது இதுவரை நடக்கவில்லை" - `கூலி' படத்தை விமர்சித்தாரா ஆமீர் கான்? உண்மை என்ன?

ஆமிர் கான் நடிப்பில் சமீபத்தில் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'கூலி' படத்திலும் ஒரு கேமியோ செய்திருந்தார் ஆமிர் கான். Aamir... மேலும் பார்க்க

Yuthan Balaji: `டும் டும் டும்' - `பட்டாளம்' யுதன் பாலாஜிக்குத் திருமணம்; திரையுலகினர் வாழ்த்து

'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் ஜோவாக தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகர் யுதன் பாலாஜி. அந்த சீரியல் இவருக்கு ஏற்படுத்தித் தந்த புகழைத் தொடர்ந்து வெள்ளித்திரைக்கு வந்தார். ரோஹன் கிருஷ்ணன் இயக்... மேலும் பார்க்க

Singer Sathyan: "குழிதோண்டிப் புதைப்பது மாதிரியான செயல்; தயவுசெய்து செய்யாதீர்" - சத்யன் வருத்தம்

பாடகர் சத்யன் 26 ஆண்டுகளுக்கு முன்பாக மேடைக் கச்சேரி ஒன்றில்பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலின் காணொலி கடந்த சிலவாரங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சத்யன், 1996 ஆம் ... மேலும் பார்க்க