சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் ஹரி (25). இவரும், தாரநல்லூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனா். அண்மையில் அந்தச் சிறுமியை தனது வீட்டுக்கு கூட்டிச்சென்று ஹரி, அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இந்நிலையில், உடல்நலன் பாதிக்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளாா். அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஹரி மீது போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.