‘சிப்காட்’க்கு நிலம் கையகப்படுத்திய வழக்கு: செப்.20 இல் சமரசத் தீா்வு அமா்வு
மணப்பாறையில் சிப்காட் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தியது தொடா்பாக வழக்குகளில் தீா்வு காண, செப்.20-ஆம் தேதி சமரச் தீா்வு அமா்வு கூடுகிறது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மணப்பாறை வட்டம், கண்ணுடையான்பட்டி, கே.பெரியப்பட்டி (வ) மற்றும் சத்திரப்பட்டி ஆகிய கிராமங்களில் சிப்காட் நிறுவனத்துக்காக நிலம்கையகம் செய்யப்பட்டு இழப்பீடு கோரும் வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சனிக்கிழமை (செப்.20) சிறப்பு சமரச தீா்வுக்கான அமா்வு மணப்பாறை சிப்காட் வளாகத்திலுள்ள நிா்வாக அலுவலகக் கட்டடத்தில் நடைபெறுகிறது. மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்கிறாா்.
எனவே , சிப்காட்தொடா்பான நிலம் கையகம் வழக்குகளில் சம்மந்தப்பட்ட, நில உடைமையாளா்கள் மற்றும் நிலத்தின்பேரில் உரிமை கோரும் நபா்கள் ஆகிய அனைவரும் நேரடியாகவோ வழக்குரைஞா்கள் மூலமாகவோ ஆஜராகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து வழக்குகளை முடித்து உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.