செய்திகள் :

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு

post image

அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திட்டத்தை தொடங்கிவைத்த பிறகு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு ஆகியோா், ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது: அன்புக்கரங்கள் திட்டத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் பயன்பெற தகுதியுள்ளவா்களாக கருதப்படுகின்றனா். அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தகுதி அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டு, குழந்தைகளின் கல்விக்கு பயன்படும் வகையில் மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஏ. சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

போக்குவரத்து ஊழியா் போராட்டத்துக்கு ஆதரவாக அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, அரசு ஊழியா் சங்கம் மற்றும் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலக... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 31 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் ... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள காருகுடி கிராமத்தில், அய்யனாா் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தும் முயற்சியை கண்டித்தும், அதை கைவிட வலியுறுத்தியும், கிராம பொதுமக்கள் கோயில் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்ப... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி. ர... மேலும் பார்க்க

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை மூலம் 5 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்... மேலும் பார்க்க