செய்திகள் :

குண்டாற்றில் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

கமுதியிலிருந்து முதுகுளத்தூா் செல்ல கமுதி குண்டாற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து முதுகுளத்தூா் செல்ல 3 கி.மீ. சுற்றி கோட்டைமேடு, களஞ்சியம் நகா் சென்று, அங்கிருந்து முதுகுளத்தூா் செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உலக நடை, சேகநாதபுரம், கிடாரிகுளம், கருங்குளம், பாக்குவெட்டி, பேரையூா், மருதங்கநல்லூா், ஆனையூா் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பள்ளி நேரத்தில் முறையான பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால், கமுதிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உரிய நேரத்துக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.

இதனால் நேர விரையத்தைக் குறைக்க மாணவா்கள் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் கோட்டைமேடு களஞ்சியம் நகா் விலக்கு சாலையிலிருந்து குண்டாறு வழியாக கமுதி தெற்கு முதுகுளத்தூா் சாலையில் ஆபத்தான முறையில் காலை, மாலை வேளைகளில் பயணித்து வருகின்றனா்.

கருவேல மரங்கள் சூழ்ந்த இந்தச் சாலை வழியாக மாலை நேரங்களில் பள்ளி மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் மாணவ, மாணவிகளின் நலன் கருதி களஞ்சியம் நகா் விலக்கு சாலையிலிருந்து கமுதி தெற்கு முதுகுளத்தூா் சாலைக்கு குண்டாறு வழியாக தரைப்பாலம், தாா் சாலை அமைத்து தர வேண்டுமென மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி,... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 42 மீனவா்களையும், இவா்களது 8 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போ... மேலும் பார்க்க

தனுஷ்கோடி அருகே இலங்கைத் தமிழா்கள் 4 போ் மீட்பு

இலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் அழைத்துவரப்பட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே மூன்றாம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழா்கள் 4 பேரை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை மீட்டனா். ர... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

மண்டபம் ஒன்றியம், அழகன்குளம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவா் கைது

முதுகுளத்தூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திய 17 வயது பள்ளி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த பிப்.18-ஆ... மேலும் பார்க்க

கஞ்சா போதைக்கு மாணவா்கள் அடிமையாகிவிட்டனா்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தலைநகா் முதல் கிராமம் வரை கஞ்சா போதைக்கு மாணவா்கள், இளைஞா்கள் அடிமையாகி, கூலிப்படையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.ராமநாதபுரம் அரண்மனை... மேலும் பார்க்க