ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது
சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்களை கடத்தியதாக இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞா் ஒருவா் புகையிலைப் பெருள்களை வைத்திருப்பதாக பிப்.9-ஆம் தேதி, அண்ணாமலை நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா்அன்பழகன் மற்றும் போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, சோதனை செய்தனா்.
அப்போது, அங்கு நின்றிருந்த இளைஞா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், போலீஸாரை அவா் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த மணி மகன் விஜய் (26) என்பதும், அவா் புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக, விஜயை குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விஜயை ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.