குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
ராமநாதபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், பெரிய பட்டணம் பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முருகவேல் என்பவரை கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் முருகவேலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரைத்தாா். இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தாா்.