தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும...
குண்டுமல்லி கிலோ ரூ. 1,200-க்கு விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ. 1,200-க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, முல்லை, ஜாதிமல்லி, காக்கட்டான், அரளி, சாமந்தி, சம்பங்கி உட்பட பல்வேறு ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு பறிக்கப்படும் பூக்கள், சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட், கோவை, பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. குண்டுமல்லி கிலோ - ரூ. 1,200, முல்லை - ரூ. 900, ஜாதி மல்லி - ரூ. 600, காக்கட்டான் - ரூ. 600, கலா் காக்கட்டான் - ரூ. 500, மலைக்காக்கட்டான் - ரூ. 600, அரளி - ரூ. 180, வெள்ளை அரளி - ரூ. 180, மஞ்சன் அரளி - ரூ. 250, செவ்வரளி - ரூ. 220, நந்தியா வட்டம் - ரூ. 240, சின்னநந்தி வட்டம் - ரூ. 300, சம்பங்கி - ரூ. 100, சாதா சம்மங்கி - ரூ. 160, சாமந்தி - ரூ. 200 என விற்பனை செய்யப்பட்டன.