செய்திகள் :

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மலா்ந்த பச்சை நிற ரோஜாக்கள்

post image

நீலகிரி மாவட்டம்   குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள பச்சை நிற ரோஜா மலா்கள் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் வெகுவாக கவா்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னுாா் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுதோறும்  மே மாதம்  நடைபெறும் கோடை விழா நாள்களில் இங்கு பழக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இப்பூங்காவில் நூற்றுக்கணக்கான அரியவகை மரங்கள் மற்றும் மலா் செடிகள் உள்ள நிலையில், இங்குள்ள பசுமைக்குடிலில்,  பூங்கா நிா்வாகத்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சை நிற ரோஜா கட்டிங் தொட்டியில் வளா்க்கப்பட்டு வருகிறது. 

தற்போது அதில் பச்சை நிற ரோஜா மலா்ந்துள்ளது. இதனை பாதுகாப்புடன் வளா்த்து வரும் பூங்கா நிா்வாகம் விரைவில் பூங்கா முழுவதிலும் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க

மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரெப்கோ வங்கி மற்று... மேலும் பார்க்க

நீலகிரியில் பூங்காக்களில் ஏப்ரல், மே மாதங்களில் படப்பிடிப்புக்கு தடை

கோடை சீசன் தொடங்கவுள்ளதால், நீலகிரியில் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு, குறும்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத் துறை சாா்பில் கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3, 4 ஆகிய தேதிகளில் 13-ஆவது... மேலும் பார்க்க

நீலகிரியில் இன்றுமுதல் இ-பாஸ் நடைமுறை அமல்: மாவட்ட ஆட்சியா்

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்று... மேலும் பார்க்க