Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
குமரியில் பெண் தீக்குளித்து தற்கொலை
கன்னியாகுமரியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கன்னியாகுமரி அருகேயுள்ள மாதவபுரத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (52). கன்னியாகுமரி கலைஞா் குடியிருப்பில் வசித்து வந்தாா். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமியின் கணவா் பிரிந்து சென்றுவிட்டாா். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா், கடந்த 12 ஆண்டுகளாக லட்சுமியின் குடும்ப நண்பராக பழகி வந்தாராம்.
இந்நிலையில் குடும்ப நண்பரின் மனைவி, லட்சுமியின் வீட்டுக்கு வந்து எனது கணவரை உன் வீட்டில் அனுமதித்தால் காவல் நிலையத்தில் புகாா் அளித்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறிவிட்டுச் சென்றாராம்.
இதனால் மனவருத்தத்தில் இருந்த லட்சுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாா். அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஓட்டுநா்: கருங்கல் பாலூா் பகுதியை சோ்ந்தவா் சுரேஷ் (38). ஓட்டுநரான இவருக்கு குடி பழக்கம் உண்டு. இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில்,புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.