செய்திகள் :

குமுளி பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

post image

தேனி மாவட்டம், குமுளியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழக- கேரள எல்லையான குமுளி பகுதியிலிருந்த அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனை, பேருந்து நிறுத்தம் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்தப் பேருந்து நிலையம் மூடப்பட்டு, சாலையோரத்திலே பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனா். இந்தப் பகுதியில் சுகாதார வளாகமின்றி பெண்கள் உள்ளிட்டோா் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, தமிழகத்திலிருந்து அதிகளவில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு அனைத்து வசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், ரூ.5.50 கோடியில் புதிய பேருந்து நிலையம், அதனுடன்கூடிய பணிமனை, கடைகள், உணவகம், தங்கும் விடுதி, சுகாதார வளாகம் அமைக்கத் திட்டமிட்டு பணிகள் தொடங்கின. தற்போது, 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அண்மைக்காலமாக இங்கு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, குமுளி பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் 6 வாா்டுக... மேலும் பார்க்க

தேனி அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

தேனி அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை , வெள்ளிப் பொருள்கள் திருடுபோனதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருக்குமரன் நகரைச் ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு,... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள வைகை அணை வரதராஜ்நகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கெப்பணன் (58). வைகை அணையி... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் தா்மராஜ் (40). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமா... மேலும் பார்க்க