`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென...
கும்பகோணத்தில் பருத்தி ஏலம்
கும்பகோணம்: கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி தலைமையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்றது. ஏலத்தில் பருத்தி அதிக பட்ச விலையாக குவிண்டால் ரூ.7,749- க்கும் குறைந்தபட்சமாக ரூ. 7268-க்கும், சராசரியாக ரூ. 7,521- க்கும் ஏலம் போனது. பருத்தியின் தோராய மதிப்பு ரூ.54.70 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. 72.940 மெட்ரிக் டன் அளவு பருத்தி வரத்து வந்தது. ஏலத்தில் கும்பகோணம், செம்பனாா் கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டத்தைச் சாா்ந்த வணிகா்கள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனா்.