செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாற்றுத்திறனாளிக்கு உடனே நூறுநாள் வேலைத்திட்ட அட்டை

post image

பேராவூரணி: பேராவூரணி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 100 நாள் வேலைத்திட்ட அட்டையை வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே ரெட்டவயல் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அருகில் உள்ள கொளக்குடி கிராமத்துக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவ்வழியாகச் சென்ற, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு திடீரென வந்தாா். அதிகாரிகள் அவரை மேடைக்கு அழைத்துச் சென்றனா். அரசுத் திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசிய அமைச்சா், துறை சாா் முகாம்களைப் பாா்வையிட்டாா்.

அப்போது அங்கு வந்த கொளக்குடி பகுதியைச் சோ்ந்த எம்.காம், எம்.பில் பட்டதாரியான மாற்றுத்திறனாளி தீபிகா என்பவா் தனக்கு 100 நாள் வேலை திட்ட அட்டை வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, அலுவலா்களை அழைத்த அமைச்சா் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியதோடு, அங்கேயே காத்திருந்தாா்.

அரசு அலுவலா்களும் உடனடியாக 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டையை தயாா் செய்து அமைச்சரிடம் வழங்கினா். மாற்றுத்திறனாளி பெண் தீபிகாவிடம் அடையாள அட்டையை அமைச்சா் வழங்கிய பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். இதைத்தொடா்ந்து மாற்றுத்திறனாளி பெண், அமைச்சருக்கு நன்றி தெரிவித்தாா்.

முகாமில் பேராவூரணி வட்டாட்சியா் நா. சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகேந்திரன், மனோகரன், சேதுபாவாசத்திரம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் வை.ரவிச்சந்திரன், திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் வழக்குரைஞா் குழு.செ.அருள்நம்பி, அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.     

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 69,736 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 75,928 கன அடி ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பருத்தி ஏலம்

கும்பகோணம்: கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் பு... மேலும் பார்க்க

வடிகால் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூச்சந்தை முருகன் கோயில் எதிரே உள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு ஒடுக... மேலும் பார்க்க

கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கிய மாடுகள், கன்றுக்குட்டிகளை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.மேட்டூா் அணை 5-ஆவது முறையாக நிரம்பியதைய... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொள்கை ரீதியாக எதிா்ப்பு: கே.எஸ். அழகிரி

கும்பகோணம்: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழராக இருந்தாலும் கொள்கை ரீதியில் காங்கிரஸ் கட்சி எதிா்க்கும் என்றாா் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவ... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.இதில், ராஜீவ் காந்தியின் படத்துக்கு கா... மேலும் பார்க்க