செய்திகள் :

கும்பகோணம்: கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி; குப்பை தொட்டியில் வீசியதால் அதிர்ச்சி...

post image

கும்பகோணம், நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணி பெண்களை போல் வயிறு பெரிதாக இருந்துள்ளது. இது குறித்து சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கேட்டதற்கு வயிற்றில் பிரச்னை இருப்பதாக சொல்லியுள்ளார். இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற அந்த மாணவிக்கு வயிறு வலி ஏற்பட்டதை தொடர்ந்து மாதவிடாய் காரணமாக வலிப்பதாக வகுப்பறையில் சொல்லி விட்டு டாய்லெட்டுக்கு சென்றுள்ளார்.

தொடரும் அவலம்: பள்ளிக் கழிவறையில் குழந்தை பெற்ற சிறுமி!

அரை மணி நேரம் கழித்து மீண்டு அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது மாணவி மிகவும் சோர்வாக இருந்துள்ளார். ஆடையில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் அந்த மாணவியிடம் ”உனக்கு என்னாச்சு ஏன் இப்படி இருக்கிறாய், வயிற்றில் இப்ப வீக்கம் இல்லையேனு” கேட்டுள்ளனர். அதற்கு மாணவி, பிரீயட்ஸ் வந்ததில் வயிறு சரியாகி விட்டது என்றுள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட, மற்ற மாணவிகள் பேராசிரியையிடம் சொல்லியுள்ளனர்.

உடனே, 108 ஆம்புலன்ஸ் வர வைத்து மாணவியை கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். டாக்டர்கள், என்ன செய்கிறது என்றதற்கு முறையாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்ததில் குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது. பீரியட்டால் ரத்தப்போக்கு ஏற்படவில்லை, குழந்தை பிறந்திருப்பதால் ஏற்பட்டதாக டாக்டர்கள் கூற கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை என்ன செய்தாய் என கேட்டுள்ளனர். அந்த மாணவி அழுது கொண்டே, எனக்கு பிறந்த குழந்தையை டாய்லெட் அருகே உள்ள குப்பை தொட்டியில் போட்டு விட்டேன் என்றிருக்கிறார். உடனே, கல்லூரிக்கு சென்று குப்பை தொட்டியில் பார்த்த போது சின்ன சின்ன காயங்களுடன் கிடந்த பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைக்கும் தீவுர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், மாணவியும் அவரது உறவினரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்குமான காதல் நெருக்கமாக அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். மாதங்கள் கடந்த நிலையில் வயிறு பெரிதாகியுள்ளது. அதையும் பல காரணங்களை சொல்லி சமாளித்துள்ளார். இது தன் வீட்டுக்கும், வெளியேவும் தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்ற பயத்தில் மறைத்துள்ளார். தன் நெருங்கிய தோழிகளிடத்தில் கூட சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கல்லூரியில் இருந்த போது, பிரசவ வலி ஏற்படவும் டாய்லெட்டுக்கு சென்று அங்கேயே குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு விட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார். பிரசவ வலியை எப்படி தாங்கினார் என்பது எல்லோருக்கும் ஆச்சர்யமாக உள்ளது. நல்ல வேளையாக குழந்தைக்கும் எதுவும் ஆகவில்லை. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனையும், விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடன்; ஜப்தி செய்யப்பட்ட வீடு; விஷம் குடித்த தம்பதிகள்

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மனைவி பத்ரகாளி. லாரி டிரைவரான சங்கரன், தனக்குச் சொந்தமான வீட்டை அடகு வைத்து, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.5 லட்சம... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்; மனைவியைக் கொன்ற இளைஞர்; திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா (வயது 31) என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், வெங்கடேஷுக்கு ... மேலும் பார்க்க

வேங்கைவயல்: "மலம் கலந்த நீரை யாரும் பருகவில்லை" - நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கு இரண்டாவது முறை... மேலும் பார்க்க

சென்னை: ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய இளைஞர்களின் பகீர் பின்னணி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் பயணித்த காரை தி.மு.க கொடி கட்டிய கார் ஒன்றும் இன்னொரு காரும் விரட்டியது. அதனால் அத... மேலும் பார்க்க

“ECR விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அதிமுகவைச் சேர்ந்தவர்" - ஆர்.எஸ்.பாரதி சொல்வதென்ன?

சென்னை ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.சென்னை ஈ.சி.ஆர். சாலையில், கா... மேலும் பார்க்க

சென்னை: மாணவிக்குப் பாலியல் தொல்லை; கட்டாய திருமணம் - காவலர் உட்பட 3 பேர் சிக்கிய பின்னணி!

வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, குழந்தைகளுடன் ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இந்த தம்பதியினரின் 14 வயது மகள், சென்னையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வர... மேலும் பார்க்க