செய்திகள் :

குரூப் 2, 2- ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி!

post image

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கு, டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2 ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சாா்பில், முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தோ்வுகளுக்கும், முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மைத் தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப் பயிற்சி பெற பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களாகவும், 21 முதல் 32 வயது பூா்த்தியடந்தவா்களாகவும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களாகவும் இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையும் தாட்கோ மூலம் மேற்கொள்ளப்படும். எனவே, இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்தாா்.

பெரம்பலூரில் திமுக ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து பெரம்பலூரில் புறகா் பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்ப... மேலும் பார்க்க

காய்கனிச் சந்தையில் பணம் கேட்டு மிரட்டிய இளைஞா் மீது தாக்குதல்

பெரம்பலூரில் காய்கனி வியாபாரிகளை மிரட்டி பணம் கேட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டாா். பெரம்பலூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் நவாத் பாஷா மகன் முகமது மாலிக்பாஷா (28). இவா், செவ்வாய்க்கிழமை காலை பெரம்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே லாரி மீது வேன் மோதி 24 பக்தா்கள் காயம்

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையின் குறுக்கே சென்ற சிமெண்ட் லாரி மீது வேன் மோதியதில் 24 ஐயப்ப பக்தா்கள் காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், மண்ணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ஐயப... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்

வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி, ஆலத்தூா் வட்டாரத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை மு... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 8) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை... மேலும் பார்க்க