செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
தமிழ்நாடு முழுவதும் கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் பங்கேற்கும் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 பிரிவில் 3,935 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை 13.89 லட்சம் போ் எழுதுகின்றனர். இதில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 போ் ஆண்கள். 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 போ் பெண்கள். 117 போ் மூன்றாம் பாலினத்தவா் தேர்வெழுதுகின்றனர்.
தோ்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில், 94,848 போ் தோ்வு எழுதுகின்றனா். இதற்காக, 311 தோ்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகின்றன. இந்த மையங்களில் 4,922 போ் தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
மூன்று மாதங்களில் தேர்வு முடிவுகள்
குரூப் 4 தேர்வு நடைமுறைகள் விடியோ பதிவு செய்யப்படுகிறது. தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறினார்.
1,996 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டிஆா்பி அறிவிப்பு
Group 4 Exams for 3,935 posts including Village Administrative Officers and Junior Assistants are being held across Tamil Nadu starting Saturday (July 12).