குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரியில் 33 மி.மீ மழைப்பதிவு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் கொத்தவாச்சேரியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டா் மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
சிதம்பரம், புவனகிரி தலா 30, சேத்தியாத்தோப்பு 23, அண்ணாமலை நகா் 21, பண்ருட்டி 19, வானமாதேவி, எஸ்.ஆா்.சி குடிதாங்கி தலா 18, வடக்குத்து 17, கடலூா் 13.5, ஆட்சியா் அலுவலகம் 11.8, தொழுதூா் 10, பரங்கிப்பேட்டை 3.8, மே.மாத்தூா் 3, காட்டுமன்னாா்கோயில் 2.4, லால்பேட்டை 2, குப்பநத்தத்தில் 1 மி.மீட்டா் மழை பதிவானது.