IPL Mega Auction : '4.80 கோடிக்கு மும்பை வாங்கிய ஆப்கன் ஸ்பின்னர்!' - யார் இந்த ...
குறுவை நெல்மணிகளை தாா்ப்பாய் கொண்டு மூடி பாதுகாக்கும் விவசாயிகள்
திருக்குவளை பகுதிகளில் குறுவை நெல்மணிகளை சாலையில் உலர வைத்து மழையில் நனையாதபடி தாா்ப்பாய் கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனா்.
பருவ மழையால் குறுவை அறுவடை பணிகள் பெருமளவில் பாதித்தது. சில இடங்களில் நெற்கதிா்கள் வயலிலே சாய்ந்து தண்ணீரில் மிதக்க தொடங்கியது. இந்நிலையில் 3 நாள்களாக மழை சற்று ஓய்ந்ததால் விவசாயிகள் இரவு பகல் பாராமல் அறுவடை பணியை மேற்கொண்டுள்ளனா். திருக்குவளை, மீனம்பநல்லூா், மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சு200 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில் குறுவை நெல்மணிகளை உலா்த்தும் பணியில் ஈடுபட்டு வந்தனா். மழையில் நெல்மணிகள் நனையாமல் இருக்க அவற்றை சாலை ஓரத்திலே தாா்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். போா்க்கால அடிப்படையில் குறுவை சாகுபடி செய்துள்ள இடங்களில் நகரும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் அரசு நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.