செய்திகள் :

குறைக்கப்படும் ரெப்போ விகிதம்... கடன் பெற்றோருக்கு நற்செய்தி..!

post image

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனின் அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. ரிசர்வ் வங்கியில் ரெப்போ விகிதம் குறைக்கப்படும்போது நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீடு, கார் உள்ளிட்ட கடன் பெற்றவர்களுக்கான வட்டி விகிதம் குறைப்படுகிறது. இதனால், கடன் தொகை அல்லது கடனுக்கான தவணை குறைகிறது.

அந்த வகையில், பணவீக்கத்தின் அடிப்படையில் நிகழாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் (1 சதவிகிதம்) வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. தற்போதைய வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக இருக்கிறது. இந்த ரெப்போ விகிதத்தை மேலும், 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த முறை நடைபெற்ற நிதி கொள்கைக் கூட்டத்தில், மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் 4.6 சதவிகிதமாக இருக்கும் பணவீக்கம், 2026 நிதியாண்டிற்கான சராசரி 3 முதல் 3.2 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் சாதகமாக இருப்பதால், மத்திய வங்கி விரைவில் ரெப்போ விகிதத்தை மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நிதி கொள்கைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ரெப்போ விகிதம் குறைப்பதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சியான செய்தி யாருக்கு?

இந்த ஆண்டு வீட்டுக் கடன் வாங்கியவர்கள், ஏற்கனவே ரெப்போ விகிதக் குறைப்புகளால் பயனடைந்துள்ளனர். ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதன் விளைவாக, பல வங்கிகள் இப்போது 8 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டி விகிதங்களில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. ஏற்ற இறக்க வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் இன்ட்ரஸ்ட்) வீடு, கார் வாங்கியவர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தியாகவே அமைந்திருக்கிறது.

RBI Repo Rate Cut Brings Good News for Homebuyers: EMIs to Reduce Substantially

இதையும் படிக்க :மதுரையில் ஆக.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு! - விஜய்

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப்பட்டியல் அறிமுகம்: ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம்

நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், பாா்வையாளா்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில், நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராகி இட்லி, சோள உப்புமா, பாசிப்பயற... மேலும் பார்க்க

தெலங்கானா-ஆந்திரம் நீா் பங்கீடு இழுபறிக்கு தீா்வு: தெலங்கானா முதல்வா்

தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நீா் பங்கீடு தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், சில முக்கியப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெலங்கானா முதல... மேலும் பார்க்க

ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பத்தில் தன்னிறைவு: முப்படை தலைமைத் தளபதி வலியுறுத்தல்

ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் அவற்றை எதிா்கொண்டு தாக்கி அழிக்கும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புத் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு அடைவது இந்தியாவுக்கு வியூக ரீதியில் அவசியமானது’ என்று முப்ப... மேலும் பார்க்க

ஜேஇஎம் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதி சுட்டுக்கொலை: ஜம்மு-காஷ்மீா் காவல் துறை டிஜிபி

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) பயங்கரவாத இயக்கத்தின் மிக மூத்த தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல் துறை டிஜிபி நலின் பிரபாத் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

கழிப்பறை வசதிகள்: அறிக்கை சமா்ப்பிக்க 20 உயா்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு: உச்சநீதிமன்றம்

அனைத்து நீதிமன்றங்களிலும் கழிப்பறை வசதிகள் எந்த அளவில் இடம்பெற்றுள்ளன என்பது தொடா்பாக நிலை அறிக்கையை சமா்ப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உள்பட 20 உயா்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு விதித்து உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க