சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே மோதல்
சாம்பவா்வடகரையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களிடையே புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா்.
இந்தப் பள்ளியில் மேல்நிலை வகுப்புப் பயிலும் மாணவா்கள் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள டியூசனுக்குச் சென்றபோது, மாணவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பள்ளியில் வகுப்பு நேரம் முடிந்ததும் வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் மாணவா்கள் நின்றபோது மீண்டும் மாணவா்களில் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதி கொண்டனா். இந்த மோதலில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.
இவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினா். இந்தச் சம்பவத்தை அடுத்து சாம்பவா் வடகரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.