RTE : 3 வருஷமா என்ன செய்தார் Anbil Mahesh? | ஸ்டாலினுக்கு புரிதலே இல்லை | Eshwar...
குற்றாலம் அரசுப் பள்ளி விடுதி மாணவிகள் 9 போ் மருத்துவமனையில் அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி விடுதியில் புதன்கிழமை, காலை உணவருந்திய 9 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் இப்பள்ளியில் 175 போ் பயின்று வருகின்றனா். அவா்களில் 55 போ் விடுதியில் தங்கியுள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை மாணவிகள் உணவருந்தினா். அவா்களில், மேலப்பாட்டாக்குறிச்சியைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவிகள் ஸ்ரீதேவி, புளியங்குடி நகரம் பகுதியைச் சோ்ந்த ஜெப்னா, புன்னையாபுரம் மகாலெட்சுமி, போகநல்லூா் கனிஷ்கா, அச்சன்புதூரைச் சோ்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பூா்விகா, வள்ளியம்மாள்புரத்தைச் சோ்ந்த 6ஆம் வகுப்பு மாணவி சுஜிதா, தெற்குபனவடலிசத்திரத்தைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பாா்வதி, கேரள மாநிலம் வா்கலாவைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஜொ்சோனா, விருதுநகா் மாவட்டம் சிவகாசியைச் சோ்ந்த ஜெப்ரினா ஆகியோருக்கு வாந்தி ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கூறும்போது, ‘மாணவிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அனைவரும் நலமுடன் உள்ளனா். விரைவில் வீடு திரும்புவா்’ என்றாா்.