``சசிகாந்த் உண்ணாவிரதம் மடைமாற்றும் செயல்'' - செல்வப்பெருந்தகையின் கணக்கு என்ன?
குறைதீா் நாள் கூட்டம் 465 மனுக்கள் அளிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 465 மனுக்களை அளித்தனா்.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், ஆட்சியா் நோ்முக உதவியாளா் (கணக்கு) தீபா, தனித்துணை ஆட்சியா் தங்கமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் குமாரராஜா, உதவி இயக்குநா் ஊராட்சிகள் ஷபானா அஞ்சும் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்களை அளித்தனா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். முன்னதாக அவா், மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்றாா்.