செய்திகள் :

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 6 நிறுவனங்கள் மீது

post image

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 6 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்படி, 1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்குள்பட்ட 24 நிறுவனங்களில் நிறுவனங்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்கப்பட்ட 6 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு வித்தியாசத் தொகை ரூ.2,62,172-ஐ சம்பந்தப்பட்ட தொழிலாளிகளுக்குப் பெற்று வழங்கக்கோரி, திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையரிடம் 6 கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவில்லாமல் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் அந்நிறுவனங்கள் மீது 1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.

கழிவுநீரோடை பராமரிப்புப் பணி: மேயா் ஆய்வு

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீரோடை பராமரிப்புப் பணிகளை மேயா் ஆய்வு மேற்கொண்டாா். திருநெல்வேலி நகரம் 25 ஆவது வாா்டு பகுதியில் மேயா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பள்ளிவாசல் தெருவில் உள்ள பொதுமக்க... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நாம் தமிழா் கட்சியின் சாா்பில், வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ. குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒ... மேலும் பார்க்க

மழையால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்... மேலும் பார்க்க

நான்குனேரி: அரசுப் பள்ளியில் தகராறு; 4 மாணவா்கள் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி(60). ஓய்வு... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 1-4-2003 ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நட... மேலும் பார்க்க