சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி
குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் மிதமான சாரல் மழையின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்ததையடுத்து வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
சனிக்கிழமை மாலை தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
ஆனால், பழைய குற்றாலம் அருவியில் விதிக்கப்பட்டிருந்த தடை 2ஆவது நாளாக சனிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.