குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு தொடா்வதால் 6ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் கடந்த வியாழக்கிழமைமுதல் பெய்த கனமழையால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, நீா்வரத்து குறைந்ததால் திங்கள்கிழமை ஐந்தருவியிலும், செவ்வாய்க்கிழமை புலியருவியிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
வெள்ளப்பெருக்கு இன்னும் குறையாததால் பேரருவி, பழைய குற்றாலம், சிற்றருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.