வேளச்சேரியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் காயம்
குலசேகரன்பட்டினம் திருவிழா: போக்குவரத்து மாற்றம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சரக்கு வாகனங்கள் திங்கள்கிழமை (செப்.22) மாலை 6 மணி முதல் புதன்கிழமை இரவு வரை அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக இலகுரக சரக்கு வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது .
உடன்குடி ஈசிஆா் புறவழிச் சாலை பகுதிகளில் செல்லும் அத்தியாவசிய பொருள்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என மாவட்ட காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.