ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த தமிழ்நாயகத்தின் மகன் ரித்திக் (14). இவா், தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை ரித்திக் தனது நண்பா்களுடன், மீதிகுடி அருகே உள்ள குளத்தில் குளித்துள்ளாா்.
அப்போது, ரித்திக் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா். உடனே, அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு, ரித்திக்கை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.