சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
குளவாய்ப்பட்டி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகேயுள்ள குளவாய்ப்பட்டி சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் கால யாகபூஜை புதன்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வியாழக்கிழமை காலை சிவாச்சாரியாா் இடையாத்தூா் மணி குருக்கள் தலைமையில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் திரளான பொதுமக்கள் வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குளவாய்ப்பட்டி ஊா் பொதுமக்கள் செய்தனா். பாதுகாப்பு பணியில் காரையூா் போலீஸாா் ஈடுபட்டனா்.