ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
குழந்தைகளுடன் வரவேற்ற எலான் மஸ்க்; மோடிக்குக் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்! - Modi US Visit
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நேற்று இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில், வாஷிங்டன் டிசியில் உள்ள பிளேர் ஹவுஸில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கைச் சந்தித்தார். எலான் மஸ்க் தன் மூன்று குழந்தைகளுடன் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது எலான் மஸ்க் பிரதமர் மோடிக்கு ஒரு பரிசை வழங்கினார். அது என்ன பரிசு என சமூக வலைதளங்களில் பலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அது ஸ்டார்ஷிப்பில் பயன்படுத்தப்படும் heat tile என்றும், இன்னும் சிலர் heat shield என்றும் குறிப்பிடுகின்றனர்.

இதற்கிடையில், இருவரின் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``விண்வெளி இயக்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்தியாவின் சீர்திருத்தம், முன்னேற்றத்துக்கான முயற்சிகள் பற்றி நான் பேசினேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில், அரசு செயல்திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் எலான் மஸ்க், அரசின் செயல்திறன், உற்பத்தித்திறனை அதிகரிக்க கூட்டாட்சி, தொழில்நுட்பம், மென்பொருளை நவீனமயமாக்குதல் போன்றப் பணியைக் கொண்டுவருகிறார் என்பது குறிபிடத்தக்கது.