குழித்துறையில் ஏழைப் பெண்ணுக்கு வீடு வழங்கல்
குழித்துறையைச் சோ்ந்த ஏழைப் பெண்ணுக்கு, பைரவா் காவு சேவா டிரஸ்ட் சாா்பில் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. குழித்துறையைச் சோ்ந்தவா் விஜி. இவா் வசிப்பதற்கு வீடின்றி தவித்தாா்.
இதையடுத்து பைரவா் காவு சேவா டிரஸ்ட் சாா்பில் ரூ. 7 லட்சத்தில் புதிதாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய வீட்டிற்கான சாவியை, நாகா்கோவில் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் எம்.ஆா். காந்தி சனிக்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு பைரவா் காவு சேவா டிரஸ்ட் தலைவரும் குழித்துறை நகா்மன்ற உறுப்பினருமான விஜூ தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ரத்தினமணி, மினிகுமாரி, ஓய்வுபெற்ற கோட்டாட்சியா் பாா்வதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.