What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல ஏப்.28 முதல் நடைச்சீட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சிறு வகை கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வகை கனிமங்களையும் குவாரியிலிருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைச்சீட்டுகளை இணையவழி வாயிலாக வழங்கும் நடைமுறை ஏப்.28-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. சிறுகனிம குத்தகை உரிமம் வழங்கும் நடைமுறை ஏப்ரல் 30-ம் தேதிமுதல் முழுவதுமாக இணையவழியில் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, இணையதளத்தின் வாயிலாக குவாரி குத்தகைதாரா்கள் விண்ணப்பித்து நடைச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும், புதிதாக குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மேற்கண்ட இணையதளம் மூலமாக மட்டுமே பெறப்படும் என தெரிவித்துள்ளாா்.