செய்திகள் :

கூகுள் செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தி அறிமுகம்!

post image

தேடுபொறி தளமான கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் இந்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஏஐ மோட், ஜெமினி 2.5 என்ற இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது.

கூகுள் தேடுபொறி இணையதளம், முதலில் கடந்த மார்ச் மாதம் ஆங்கிலத்தில் ஏஐ மோடு பயன்பாட்டை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் 5 மொழிகளில் செய்யறிவு மோடு அறிமுகமாகியிருக்கிறது. மார்ச் மாதம் முதல், செய்யறிவால் இயங்கும் ஓபன்ஏஐ-ன் சாட்ஜிபிடி தேடுதல் போன்றவை மக்களிடையே அதிக பயன்பாட்டுக்கு வந்திருந்தது.

இந்த நிலையில்தான், ஹிந்தி, இந்தோனேசியா, ஜப்பானீஸ், கொரியன், பிரேசிலியன் போர்த்துகீஸ் மொழிகளிலும் செய்யறிவு பயன்பாட்டை அறிமுகப்பத்தியிருக்கிறது.

கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தியை இணைத்திருப்பது, ஹிந்தி மொழிப் பேசும் மக்கள், தாய் மொழியிலேயே செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

வெகுகாலம் காத்திருப்பில் இருந்த உள்ளூர் மொழியில் செய்யறிவு பயன்பாடு கடந்த செவ்வாயன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, ஏராளமான உள்ளூர் மொழிகளில் செய்யறிவு பயன்பாட்டைக் கொண்டு வருவதற்கான ஆரம்பமாக அமைந்துள்ளது.

இது மொழி தடைகளை உடைத்து, ஹிந்தி பேசுபவர்கள் தேடல் தொழில்நுட்பத்துடன் தொடர்புகொள்ளும் விதத்தையே மாற்ற உதவும் என்று கூறப்படுகிறது.

இதுவரை ஹிந்தியில் கேள்வி எழுப்ப முடியாமல் இருந்தவர்களுக்கு இதன் மூலம் தங்களுக்குத் தேவையான தகவல்களை விரும்பியபடி கேட்டுப் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தேடலை உறுதி செய்வது என்பது, வெறும் மொழிபெயர்ப்பை மட்டும் அல்லாமல், அதையும் தாண்டி, உள்ளூர் மொழிகளை துல்லியமாகப் புரிந்துகொள்வதில் இருக்கிறது. உள்ளூர் மொழிகளைப் புரிந்துகொள்வதில் மிகக்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, கூகுளின் மிகவும் மேம்பட்ட செய்யறிவு தேடல், நாங்கள் புதிதாக இணைத்துள்ள உள்ளூர் மொழிகளில் தேடுவதற்கு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், செய்யறிவு பயன்பாடானது, அமெரிக்காவில் உணவகங்கள் முன்பதிவு, உள்ளூர் சேவைகளுக்கான முன்பதிவு, நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையையும் இணைத்துக் கொண்டுள்ளது. இது கூகுள் ஏஐ அல்ட்ரா பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Search engine giant Google has introduced Hindi in its predictive text application. This AI mode is powered by the Gemini 2.5 operating system.

இதையும் படிக்க... சார்லி கிர்க் கொலையாளி! வெளியானது புதிய விடியோ

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி... மேலும் பார்க்க

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர். நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு!

மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராமகூலம் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். இந்தியா உடனான நல்லுறவை மேலும் விரிவாக்கும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குக்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், 2022 ஆம் ஆண்டில் காலமானார். இந்த நிலையில், அவ... மேலும் பார்க்க

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!

புது தில்லி: கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனருமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.நாட்டின் தேர்தல்களில் நடக்கும் முறைகேடுகள... மேலும் பார்க்க