செய்திகள் :

"கூடங்குளம், கல்பாக்கம் மின் பகிர்வு விவகாரத்தில் புரிந்துணர்வுடன் ஒருமித்த கருத்து நிலவுகிறது'

post image

நமது சிறப்பு நிருபர்

கூடங்குளம், கல்பாக்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநிலத்துக்கே வழங்கக் கோரும் விவகாரத்தில், கூட்டாட்சி புரிந்துணர்வின்படியே மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசிய மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஆர். சுதா, "கூடங்குளம், கல்பாக்கம் மின்னுற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை உற்பத்தி மாநிலங்களே அவற்றின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மின் பகிர்வு அதிகரிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவையில் இருந்ததால் அவரிடமே பதிலை எதிர்பார்ப்பதாக எம்.பி. சுதா தெரிவித்தார்.

இருப்பினும், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுந்து, "மின்னுற்பத்தி நிலையங்களின் மின்சார பகிர்வு குறித்து அணுசக்தித் துறை மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தித் துறை அமைச்சகம் ஆகியவை மிக விரிவாக விவாதித்துள்ளன. ஆரம்பத்தில் காட்கில் திட்டத்தின்படி மின்னுற்பத்தி செய்யும் மாநிலத்துக்கு 15 முதல 20 சதவீதம் வரை மின்சாரத்தை பகிரலாம் என்றிருந்தது. அது தற்போது 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 சதவீதத்தை அண்டை மாநிலங்களுக்கும் மீதமுள்ள ஒதுக்கப்படாத 15 சதவீதம் மின்பாதைக்கும் செல்கிறது. இந்த விஷயத்தில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. கூட்டாட்சி உணர்வின்படி அது சரியானதும் கூட' என்றார்.

இதைத் தொடர்ந்து, மின்னுற்பத்தி தொடர்பான சுதாவின் துணைக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "2014-இல் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்தபோது நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி ஆற்றல் 4,780 மெகா வாட்டாக இருந்தது. இப்போது அது இரட்டிப்பாகி 8,180 மெகா வாட் ஆகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2031-32-இல் நமது மின்னுற்பத்தி திறன் மும்மடங்கு பெரும்,' என்றார்.

விரைவு ரயில் வேகம் குறைப்பு: தமிழக எம்.பி.க்கள் கேள்வி

நமது சிறப்பு நிருபர்நாடு முழுவதும் பல்வேறு மார்க்கங்களில் அதிவிரைவு ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவது குறித்தும் விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது குறித்தும் மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ப... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி ரயில் விபத்துக்கும் "கவச்' தொழில்நுட்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டி.ஆர். பாலுக்கு ரயில்வே அமைச்சர் பதில்

நமது சிறப்பு நிருபர்கும்மிடிப்பூண்டி ரயில் விபத்துக்கும் "கவச்' தொழில்நுட்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வ... மேலும் பார்க்க

ஹிந்து கோயில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்

நமது நிருபர்தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருது ... மேலும் பார்க்க

சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி

நமது நிருபர்சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக மக்களவையில் புத... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம் கூடாது: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது நிருபர்மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு உரிமம் வழங்கும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புதன்கிழமை வலியுறுத்தினர்.மதுரை மாவட்டம், அரிட்டாபட்... மேலும் பார்க்க