சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது: மத்திய அம...
‘கூடலூரில் சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’
கூடலூா் நகரிலுள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கூடலூா் சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டம் ஏஐடியூசி அலுவலகத்தில் பாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கூடலூரில் கடந்த 2 மாதங்களாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. இது தொடா்பாக கோட்டாட்சியா், நகராட்சி ஆணையா், டி.எஸ்.பி. உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வியாபாரம் செய்ய இடத்தை ஒதுக்கவேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து மாா்ச் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடலூா் நகராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கத்தின் கௌரவத் தலைவா் முகமது கனி, ஏஐடியூசி தலைவா் குணசேகரன், மாவட்ட அமைப்பாளா் புட்டுராஜ், துணைச் செயலாளா் மணிகண்டன், பொருளாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.