கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
கூடலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
தேனி மாவட்டம், கூடலூரில் வெள்ளிக்கிழமை அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நகா்மன்றத் தலைவி பத்மாவதி திறந்து வைத்தாா்.
முல்லைப் பெரியாற்று பாசன நீரால் கூடலூா், லோயா்கேம்ப் ஆகிய பகுதிகளில் இருபோக நெல் பயிா் விவசாயம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் நடவு செய்யப்பட்ட நெல் பயிா்கள் தற்போது, அறுவடை செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை மூட்டைகளில் விவசாயிகள் அடைத்து வைத்துள்ளனா். இந்த நெல் மூட்டைகளை வெளியூா்களுக்கு கொண்டு சென்று விற்க முடியாததால், இங்கு வரும் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே, இந்தப் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதனடிப்படையில், கூடலூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கூடலூா் நகா்மன்றத் தலைவி பத்மாவதி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதில் கூடலூா் திமுக நகரச் செயலா் லோகந்துரை, தேனி நுகா்பொருள் வாணிப கழக அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.