சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
கூடலூரில் மக்கள் நீதிமன்றம்: 127 வழக்குகளுக்குத் தீா்வு!
கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 127 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.
நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் சாா்பில் கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு சாா்பு நீதிபதி முகமது அன்சாரி, முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் சசின்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
வழக்குரைஞா்கள் சதீஷ்குமாா், ரபியா பீவி, வங்கி ஊழியா்கள் மற்றும் நீதித் துறை ஊழியா்கள் கலந்துகொண்டனா். இதில், ரூ.58.90 லட்சம் மதிப்பிலான 127 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.