பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா?
கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின்னணி என்ன?
கூடலூரில் நேற்று ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து ஊட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ஒன்று கூடலூர் அருகில் உள்ள பாடந்துறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 10 பேர் காயம் அடைந்தனர். பேருந்துக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் காஞ்சி கோயில் பகுதியிலிருந்து திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காகக் கூடலூர் சென்று கொண்டிருந்தவர்களின் பேருந்து கூடலூர் அருகில் உள்ள தவளை மலைப் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சாலையிலிருந்து நிலைதடுமாறி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்திலிருந்தவர்களை வாகன ஓட்டுநர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
படுகாயமடைந்த 5 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த இரண்டு விபத்துகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பாதையில் அனுபவமிக்க ஓட்டுநர்களைக் கொண்டு கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனக் காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
