செய்திகள் :

கூடலூர்: தொடர் கால்நடை வேட்டை; போக்கு காட்டும் புலி; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; பின்னணி என்ன?

post image

நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேவர் சோலை சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக புலி நடமாட்டம் இருப்பதை மக்கள் பார்த்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டங்களில் உலவும் அந்தப் புலி தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. 10-ற்கும் அதிகமான கால்நடைகளை வேட்டையாடிய அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்கி யானைகள்
கும்கி யானைகள்

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்களை பொருத்திக் கண்காணித்து வருகின்றனர். மேலும் புலியை உயிருடன் பிடிக்கும் முயற்சியாக 5 இடங்களில் கூண்டுகளை அமைத்துள்ளனர். வனத்துறையின் களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய இரண்டு கும்கி யானைகளை தற்போது களத்தில் இறக்கியுள்ளனர்

இது குறித்துத் தெரிவித்துள்ள வனத்துறையினர், "தேவர் சோலை, பாடந்துறை, சர்க்கார் மூலை போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதத்தில் புலி ஒன்று 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய நிகழ்வு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் புலியை அடையாளம் காணவும் உடல்நலம் குறித்து அறியவும் அதிநவீன தானியங்கி சென்ஸார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கும்கி யானைகள்
கும்கி யானைகள்

வன ஊழியர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறப்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத பகுதியில் குறிப்பிட்ட அந்தப் புலி தென்படும் பட்சத்தில்‌ யானை மீது அமர்ந்து துப்பாக்கி மூலம் கால்நடை மருத்துவர்கள் புலிக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக முதுமலையிலிருந்து வசீம், விஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அச்சப்படத் தேவையில்லை" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ராணிப்பேட்டை: காவல் நிலையம் அருகில் இளைஞர் படுகொலை - திமுக கவுன்சிலர் கைது; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கவுன்சிலரின் கணவன் சுதாகர்ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள அம்மனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் அஸ்வினி (வயது 36). இவரின் கணவன் சுதாகர் (வயது 45) ஃபைனான்ஸ் விட்டு வட்டி வச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி; 2 மாணவர்கள் காயம்; என்ன நடந்தது?

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் திருச்செந்தூர... மேலும் பார்க்க

குளச்சல்: சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய உறவினர்; குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேசலிங்கம்(42). இவர் கடந்த 6 மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி... மேலும் பார்க்க

`காதல் என்ன சாதியைப் பார்த்து வருவதா?' - இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்!

சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "இன்ஸ்டாவில் வரக் கூடிய தராதரம் இல்லாத ஆட்கள... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: `அரை நிர்வாண நடனத்துடன் ஹெராயினும் புழங்குகிறது’ - சாடும் திமுக

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியரால் தமிழகத்தைச் சேர்நத கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளிய... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: 'கல்லூரி மாணவரைக் கொலை செய்தது ஏன்?’ - ஊழியர்கள் வாக்குமூலம்

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க