கூடலூா் அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா
கூடலூரிலுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சோ.சுபாஷினி தலைமை வகித்தாா். விழாவில், பாரம்பரிய முறையில் அரங்கில் கோலமிட்டு பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா்.
இதில், அனைத்துத் துறை தலைவா்கள் மற்றும் விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.