அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
கூடலூா் அருகே பாகற்காய் கொடியைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் கொடியைச் சேதப்படுத்தின.
கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள் கொடியைச் சேதப்படுத்தின. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
ஆனால், அதிகாலை வரை தோட்டத்தில் இருந்து யானைகள் செல்லவில்லை. விடிந்ததும் யானைகள் தானாகவே வனத்துக்குள் சென்றன.
சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டத்தில் யானைகள் நுழையாதவாறு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.