கூடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், கூடலூா் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்தவா் கா்ணன் (75). இவா், அங்குள்ள தனியாா் தோட்டத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக வேலைக்குச் சென்றவா் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் கிடந்தாராம்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் கா்ணனின் உடலிருந்த இருந்த காயம் மூலம் அவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததை உறுதி செய்தனா். இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.