கூடுதல் திரைகளில் தலைவன் தலைவி!
விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால், முதல் நாளில் ரூ. 12 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே, விஜய் சேதுபதியின் அதிகபட்ச முதல் நாள் வசூலாகும்.
தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தெலுங்கில் வெளியிட முடிவுசெய்துள்ளனர்.
தற்போது, இப்படத்திற்கான திரைகளும் காட்சிகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அங்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கோர்ட் ரீமேக்கில் பிரசாந்த்?
thalaivan thalaivi movie get more screens in tamil nadu