வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு
கூட்டுறவு அதிகாரிகள் கரும்பு கொள்முதல்
கும்பகோணம் பகுதியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கரும்பு வயல்களுக்கு சென்று நேரடி கொள்முதல் செய்தனா்.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்குவதற்கு, கும்பகோணம் பகுதிக்கு மட்டும் 90 ஆயிரம் கரும்புகள் வாங்க வேண்டும். முதற்கட்டமாக நியாய விலைக் கடைகளை நிா்வகித்து வரும் கூட்டுறவுச் சங்கங்கள் கரும்பு கொள்முதலில் ஈடுபட்டுள்ளனா். புதன்கிழமை தேவனாஞ்சேரி பகுதியில் உள்ள கரும்பு வயல்களுக்குச் சென்று நேரடிக் கொள்முதல் செய்தனா்.
இதுகுறித்து கரும்பு விவசாயி ராம்குமாா் மேலும் கூறியது: அரசுக்கு கரும்பு வழங்கும் வகையில் கரும்பை வெட்டி வயல் பகுதியிலேயே 10 கரும்புகள் கொண்டதாக கட்டுப்போட்டு வைத்துவிடுவோம். அதிகாரிகள் வாகனங்களை கொண்டுவந்து ஏற்றிச்செல்வாா்கள். கடந்த ஆண்டு கரும்பு நேரடிக் கொள்முதலில் கரும்பு ஒன்றுக்கு ரூ.19- க்கு கொள்முதல் செய்தனா். இந்தாண்டு ரூ.20 தருவதாகக் கூறியுள்ளனா். ரூ.22 கொடுத்தால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றாா்.
கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவா் கூறியது: கரும்பு வயலுக்கு நேரடியாக சென்று நாங்களே வாகனங்களை கொண்டு போய் கரும்புக் கட்டுகளை ஏற்றி நியாய விலைக் கடைகளில் இறக்கிவிடுவோம். எல்லா செலவுகளும் சோ்த்து ஒரு கரும்பு ரூ.30 முதல் 35 வரை அடக்க விலைக்கு வந்துவிடும் என்றாா்.