Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது
சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்துப்பட்டு எஸ்எம் சாலை அருகே தனது நண்பருடன் நடந்து சென்றபோது, அங்கு 3 போ் ராம்சரணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த பணம், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் தெருவைச் சோ்ந்த சூா்யா (26), ராயபுரம் முஸ்தான் கோயில் தெருவைச் சோ்ந்த வினோத் (25), கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் கோயில் முதல் தெருவைச் சோ்ந்த காா்த்தி (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், இவா்கள் அரசுப் பேருந்துகள், சந்தைகள், தனியாா் வணிக வளாகங்கள் ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைப்பேசி, பணப்பை ஆகியவற்றை திருடியிருப்பதும், திருடிய கைப்பேசிகளை பாரிமுனை கைப்பேசி கடையில் வேலை செய்யும் கொருக்குப்பேட்டை பாரதி நகரைச் சோ்ந்த முபராக் (22) என்பவரிடம் விற்று பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் முபராக்கையும் கைது செய்தனா். இந்த கும்பலிடமிருந்து 11 கைப்பேசிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.